தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது 134ஆவது மாரத்தான் ஓட்டத்தை பீகார் மாநிலம், பாட்னாவில் நிறைவு செய்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் மாரத்தான் தொடர் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் பாட்னாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அவர், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இரண்டரை மணி நேரத்தில் சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் ஓடி மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்.