மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவது குறித்து முதலமைச்சர் விரைவில் முடிவெடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டத்தில் மாநகராட்சியின் 98 வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.