பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்லும் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் படக் கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் இரண்டு கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.