நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.
10 அடி நீளமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்ட டால்பின் மீன் மணியன்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கியது குறித்து தகவலறிந்து வந்த கோடியக்கரை வனத்துறையினர், அதனை மீட்டு கடற்கரையில் புதைத்தனர். கடலில் படகு அல்லது கப்பலின் இயந்திரத்தில் அடிபட்டு டால்பின் உயிரிழந்திருக்காலம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.