மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் நினைவிடத்தில் வைப்பதற்காக,6 டன் எடை கொண்ட ஒற்றை பாறையை குடைந்து, அவரது முகம், கையெழுத்து உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அருகே ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிற்பக்கூடத்தில் 6 மாதங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கலை படைப்பில், எஸ்.பி.பியின் முக வடிவத்துடன், விருட்சம் மற்றும் அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பியின் பண்ணை வீட்டிற்கு இந்த சிற்பம் அனுப்பப்பட உள்ளது.