கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கக் கூடாது, அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து தரக்குறைவாக பேசக்கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவு முறையாகவும், முழுமையாகவும் பின்பற்றப்படுகிறதா என அனைத்து தனியார் பள்ளிகளும் உறுதிமொழி சான்றிதழ் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சான்றிதழ் அளித்தும் குறிப்பிட்ட பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.