கேரள முதலமைச்சருடன் பேசி கோவை மாநகரின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் 200 கோடி ரூபாய் சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கும், 7 கோடி ரூபாய் தெரு விளக்குகளை பராமரிக்கவும், 143 கொடி ரூபாய் நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.