தேர்தல் அறிக்கையில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்த முதலமைச்சர், இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டதோடு, சொல்லாத வாக்குறுதிகளையும் கூட நிறைவேற்றி வருவதாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 537 திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.