கோவையில் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய பெண் குறித்து அப்பெண்ணை அறிந்தவர்களின் வாட்ஸாப்புக்கு அவதூறாக தகவல் அனுப்பிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
வீரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுவாதி என்ற அந்த பெண், சுமார் 30 செயலிகள் மூலம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் வாங்க விண்ணப்பித்ததாகவும் , ஆனால் 57 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும், அதற்கு வட்டியையும் சேர்ந்து 74 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி பல தெரியாத எண்களில் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக சுவாதி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பெங்களூரில் செயல்படும் 'ஸ்மார்ட் லோன்' என்னும் செயலி நிறுவனத்தில் பணிபுரியும் அஷ்ரியா அப்ரீன், ரகுமான் ஷெரீப், யாசீன் பாஷா, பர்வீன் ஆகியோரை கைது செய்ததுடன், அந்த நிறுவனத்தை வெளிநாட்டில் இருந்து நடத்தி வருவதாக கூறப்படும் சன்னி என்பவரை தேடி வருகின்றனர்.