கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வியாபார நோக்கத்துடன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கரை கிலோ எடைகொண்ட மண்ணுளிப் பாம்பை வனத்துறையினர் கைப்பற்றினர்.
சுவாமிநாதபுரம் குண்டல் பகுதியில் அரவிந்த் என்பவர் தனது வீட்டில் மண்ணுளிப் பாம்பை ஒளித்து வைத்துள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று மண்ணுளிப் பாம்பை மீட்டனர்.
தலைமறைவாக உள்ள அரவிந்த், மாவட்டக் காவல் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறான் என்பது தெரியவந்துள்ளது.