2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தமாக 420 பக்கங்கள் கொண்ட அறிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டது. அதன்படி, சுமார் 9ஆயிரத்து 740 கோடி ரூபாய் மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
348 அறிவிப்புகள் நடைமுறைபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், 10 ஆண்டு காலத்தில் மொத்தம் 87ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.