ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயிகள் தங்களது மாடுகளை குண்டத்தில் இறக்குவதற்காக அழைத்து வந்தபோது போலீசார் கால்நடைகளுக்கு அனுமதி மறுத்ததால் இரு தரப்பிலும் வாக்குவாதம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து அனுமதி அளித்ததை அடுத்து விவசாயிகள் மாடுகளை தீக்குண்டத்தில் இறக்கி பண்ணாரிஅம்மனை வழிபட்டு சென்றனர்.