திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் தற்கொலை செய்தாரா அல்லது முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பை படித்து வந்த சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தோனீஸ்வரன் என்ற அந்த மாணவர், வேறொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவரின் உடல் பொன்பாடி ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் மற்றும் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.