விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 87ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு விடும் எனவும் கூறினார்.
மேலும், கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய செந்தில்பாலாஜி, முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மும்முனை மின்சாரம் வழங்க உரிய கட்டமைப்பை ஏற்படுத்த ஆய்வு செய்யப்படுவதாகவும், விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் கூறினார்.