புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பனில் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல வீரர்கள் பங்கேற்றனர்.
பந்தயத்தின் தொடக்கத்தில் ஒரு குதிரை வண்டியின் வீரர் கீழே விழுந்தும் அவர் இல்லாமலேயே முதலாம் எல்லைக் கோடு வரை சென்ற குதிரைக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.