தமிழகத்தில் சாலை விபத்துக்களை குறைக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்வதே அரசின் முதன்மையான இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் தொடங்கியதும், தமிழகத்தில் சாலை விபத்துக்களை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தில் சிக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் இன்னுயிர் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
கடந்த டிசம்பர் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 33ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.