தமிழகத்தில் பேருந்துகளில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறியவும், கண்காணிக்கவும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.