கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் கொல்லாய் என்ற இடத்தில் நள்ளிரவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் கொல்லாய் சென்ற போது தண்டவாளத்தில் இருந்த கற்களை உடைத்து விட்டு சென்றது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு லெனின் என்ற இளைஞரை கைது செய்தனர்.