கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கோழிப்பண்ணையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
ஆம்போதி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 2 கோழிப்பண்ணைகள் இருந்தன. ஒரு பண்ணையில் நேற்றிரவு திடீரென தீப்பற்றிய நிலையில், காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி மற்றொரு பண்ணையும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.