விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 69ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
ஒட்டனேந்தல் கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் 9 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் முருகப்பெருமானின் வேலில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படும். திருவிழா முடிந்ததும் இந்த எலுமிச்சை பழங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.
அதில், சென்னையைச் சேர்ந்த தம்பதி குழந்தை பாக்கியம் வேண்டி ஒரு எலுமிச்சை பழத்தை 15ஆயிரத்து 200ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். மற்ற எட்டு எலுமிச்சை பழங்கள் சுமார் 54ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின.
கடந்த ஆண்டு குழந்தை பாக்கியம் வேண்டு மூன்று எலுமிச்சை பழங்களை ஏலம் எடுத்த விழுப்புரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, இந்த ஆண்டு குழந்த பிறந்த நிலையில், அவர்கள் தங்களது குழந்தையின் எடைக்கு சமமாக சில்லரை காசுகளை முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.