தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதி நிலை அறிக்கையில், சிறுதானிய சாகுபடி மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும், புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படாது ஏமாற்றமளிப்பதாகவும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.