விவசாய நிலங்களில் இடுபொருட்களை தெளிக்க ட்ரோன்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்து குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பம்பு செட்டுகள் 70% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.