தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனைமரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல் மற்றும் அதற்கான உபகரணங்கள் ஆகியவை 75% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் என்றும் சிறந்த பனை ஏறும் எந்திர கண்டுபிடிப்புக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் எட்டு கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மத்திய - மாநில அரசு நிதியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழுகளின் வருமானத்தை பெருக்க 3 ஆயிரத்து 350 தேனீ தொகுப்புகள் அமைக்கப்பட உள்ளன.