புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
அரசடிபட்டியில் மயில்வாகனன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுப்பிடி வீரர்கள் ஆர்வமுடன் அடங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற காளை மற்றும் மாடுப்பிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.