முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
தொகுதி வளர்ச்சிப் பணிகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.