தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 24ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடியது. இதில், வேளாண் துறைக்கான பட்ஜெட் நாளைய தினம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
வருகிற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், வியாழக்கிழமையான 24-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.