சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், முதலில், பேச வாய்ப்பளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரினார். அதற்கு, சபாநாயகர் வாய்ப்பு மறுக்கவே, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.