வெளிநாட்டில் உள்ள மருத்துவ தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு முதலில் கொண்டு வருவதற்கான முயற்சியை பிரிட்டிஷ் கவுன்சில் முன்னெடுத்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை மிகத் துல்லியமாக கண்டறிவதற்கான ரோபோ எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிரிட்டிஷ் கவுன்சிலின் துணைத் தூதர் அலிவர் ஆகியோர் பங்கேற்றனர். உலக நாடுகளில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வெளிநாடு வாழ் தமிழ்நாடு மருத்துவர்களின் உறுதிமொழி பத்திரம் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.