தமிழ்நாட்டில் நகராட்சி எல்லைக்குள் இயங்கும் 5 சுங்கச்சாவடிகளை அகற்றவும், உயர்மட்ட சாலைகள் அமைக்கக்கோரியும் அமைச்சர் எ.வ.வேலு, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தினார்.
டெல்லியில் நிதின் கட்காரியை சந்தித்த அவர், செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையினை 8 வழித்தடமாக அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சென்னை - தடா சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை 6 வழித்தட உயர்மட்ட சாலையும், தாம்பரம் - செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட சாலையும் அமைக்க எ.வ.வேலு வலியுறுத்தினார்.
மேலும், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூரில் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.