பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளத்தில் சிறுமிகளை பேசவைத்து வீடியோ பதிவிட்ட போலிச்சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரு தினங்களாக சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இரு வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ குறித்து விசாரித்த செங்கல்பட்டு காவல் கன்காணிப்பாளர் அரவிந்தன் , பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட சிறுமியிடம் 6 மணி நேரம் நேரடி விசாரணை நடத்தினார்.
முதலில் அந்த சிறுமி தெரிவித்த புகாரின் பேரில் கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமியின் உறவினர்கள் 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட விசாரணை யில் இந்த சிறுமியை வீடியோவில் பேச வைத்தது அதே ஊரில் பகவான் ஓம் ஈசன் சேவா அறக்கட்டளை என்ற பெயரில் மாந்த் ரீக ஆசிரமம் நடத்திவரும் வடிவேல் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வீடியோ பதிவிட்ட சிறுமி தனது தாய் தங்கை மற்றும் சகோதரருடன் அந்த ஆசிரமத்தில் தங்கி வருவதாக கூறபடுகிறது.
ஊருக்குள் இது போன்ற மாந்த் ரீக வேலைகள் செய்யக்கூடாது என்று ஊரில் உள்ள சிலர் சத்தம் போட்டுள்ளனர். எனவே அவர்களை பழிவாங்கும் விதமாக சிறுமியை வைத்து இந்த பாலியல் புகார் வீடியோவை பதிவிட்டது அம்பலமானது
அதே நேரத்தில் வீடியோ வெளியிட்ட சிறுமியின் அண்ணன் 2 ஆண்டுகளுக்கு.முன்பு அதே ஊரை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. சாமியார் வடிவேல் மிரட்டியதால் அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போலிச்சாமியார் வடிவேல், ஏமாற்றிய மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக போலியான வீடியோ வெளியிட தூண்டிய வடிவேலே இறுதியில் தூண்டிலில் சிக்கிய மீனாக போலீசில் சிக்கிக் கொண்டது குறிப்பிடதக்கது.