தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுகத் தேர்தலின்போது நிகழ்ந்த ரகளையின் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை ? எனக் கேள்வி எழுப்பினர்.
ஆடுதுறை பேரூராட்சித் தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்குப்பதிவு நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. வாக்குச்சீட்டுகளை பறித்துச் செல்லும் ஒருவரை போலீசார் தடுக்காமல் நிற்பதை வீடியோவில் பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இதேபோல் சென்னையை அடுத்த திருமழிசை பேரூராட்சித் தேர்தலின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.