திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே செல்போன் தரவில்லை என்ற ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தங்கையை அவரது சகோதரி அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாககோணானூர் கிராமத்தில் பழனியம்மாள் என்ற மூதாட்டி வெங்கடேஷ்வரி, தமிழ்ச்செல்வி என தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
நேற்று கோயம்புத்தூரில் உள்ள தனது மகனிடம் பேச வேண்டும் எனக் கூறி தங்கை தமிழ்ச்செல்வியின் செல்போனை கேட்டுள்ளார் வெங்கடேஸ்வரி.
தனது செல்போனில் பேலன்ஸ் இல்லை என்று கூறி தர மறுத்துள்ளார் தமிழ்ச்செல்வி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் தாயை எழுப்பிய வெங்கடேஷ்வரி, செல்போன் தர மறுத்ததால் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை அரிவாள்மனையால் வெட்டிக் கொன்றுவிட்டதாகவும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் உனக்கும் இதுதான் கதி என்றும் கூறியுள்ளார்.
பதறிப்போன பழனியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
போலீசார் விசாரணையில் வெங்கடேஷ்வரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் 7 ஆண்டுகளாக அதற்காக மாத்திரை எடுத்து வந்தவர், கடந்த 3 நாட்களாக மாத்திரை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.