நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன் , மா.சுப்பிரமணியன் , பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்ததாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மற்ற சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.