திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்ல, பக்தர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு முதல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பெளர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 17, 18ஆம் தேதிகளில் பங்குனி மாத பெளர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.