பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை தமிழர்களுக்கு இலவச தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியதோடு, மதுரை பால்பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அவர், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 50கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுமார் 84 கோடி ரூபாய் செலவில், ஏற்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.