சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் உச்சிவெயிலில் பால் குடம் எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க, இஸ்லாமியர்கள் வழி நெடுகிலும் சாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்தனர்.
அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மாசி திருவிழாவுக்காக விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு கோவிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்று விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று காரைக்குடி முத்தாளம்மன் கோவிலில் இருந்து பால்குடத்தை தலையில் சுமந்து சென்ற பக்தர்கள், செக்காலை சாலையிலுள்ள பள்ளிவாசல் வழியாக சென்ற போது அங்கிருந்த இஸ்லாமியர்கள் தண்ணீரை ஊற்றி சாலையை குளிர வைத்தனர்.