அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கியுள்ளது.
அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு 4 மாதங்களில் சிபிசிஐடிக்கும் பிறகு 2017ஆம் ஆண்டு சிபிஐக்கும் மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை அடுத்து தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், அரியலூர் டி.எஸ்.பி மதன், சிபிஐ டி.எஸ்.பி ரவி ஆகியோர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
கொலை நிகழ்ந்த திருவளர்ச்சோலை பகுதியில் இந்தக் குழு இன்று தங்களது விசாரணையை துவங்கியுள்ளது.