மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
12ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 15ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெறும்.
ஏப்ரல் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவையும்,16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.