தமிழகத்தில் 209 தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைய உள்ளதாக தெரிவித்தார்.