துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வெள்ளி முலாம் பூசி கடத்தி வரப்பட்ட 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்த வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பெண் ஒருவரை சோதனை செய்த போது, அவர் அணிந்து வந்த சங்கிலி, வெள்ளி முலாம் பூசப்பட்ட தங்க நகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 321 கிராம் கொண்ட அந்த செயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.