கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், எம்.எல்.ஏ அய்யப்பனை நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.