கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மக்கள் அடகு வைத்த 4 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆவாரம்பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகையை ஒருவர் மீட்ட போது, அது போலியானது எனத் தெரியவந்தது.
இது குறித்து அவர் வங்கி மேலாளரிடம் முறையிடவே, மேலாளர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய கார்த்திக், பல தருணங்களில் மக்கள் அடகு வைத்த நகைகளை கையாடல் செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்தது தெரியவந்தது.
வங்கியில் இருந்து திருடிய 67 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை கார்த்திக் என்ன செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.