செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

300 கி.மீ தொலைவில் தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல் சின்னம்.?

Mar 05, 2022 10:35:23 AM

 

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது இன்று மாலைவரை வடமேற்குத் திசையிலும், அதன்பின் தென்மேற்குத் திசையில் வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 8 அன்று அநேக இடங்களில் மிதமான மழையும், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல், மேற்கு மத்திய வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மார்ச் 7ஆம் நாள் காலை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

 


Advertisement
திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வகம் - தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை..
இந்து மக்கள் கட்சி நிர்வாகியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்..
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்..
காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானில் 4,500 பேர் பங்கேற்பு..
தனியார் இனிப்பகத்தில் பிரம்மாண்ட தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கேக் ..
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டின் முன் பெயர்ப்பலகை வைக்க பார்வையாளர் அறிவுறுத்தல்
4 படம் ஓடினாலே முதல்வராக வேண்டும் என்று எண்ணுகிறார்கள்... நடிகர் விஜய் மீது மறைமுக விமர்சனம்
ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement