செங்கல்பட்டு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின் பொறியாளர் தட்சணாமூர்த்தி மற்றும் ராஜகோபால் ஆகியோர் புதிய மின் இணைப்பு வழங்க ஒரு நபரிடம் இலஞ்சம் கேட்டதாகக்கூறப்படுகிறது.
தகவலறிந்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரும் பணம் பெரும்போது கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் தலா ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.