வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியுதவியாக ஆயிரத்து 682 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2021 - 2022 நிதியாண்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிவாரணப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் சமாளிப்பு நிதியில் இருந்து ஏற்கெனவே மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கூடுதல் நிதியுதவியாக ஆந்திரத்துக்கு 351 கோடி ரூபாயும், இமாச்சலப் பிரதேசத்துக்கு 112 கோடி ரூபாயும், கர்நாடகத்துக்கு 492 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்துக்கு 355 கோடி ரூபாயும், தமிழ்நாட்டுக்கு 352 கோடியே 85 இலட்ச ரூபாயும், புதுச்சேரிக்கு 17 கோடியே 86 இலட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.