திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அன்று கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கிய சம்பவத்தில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான திமுக பிரமுகர் நல்ல உடல் நிலையில் இருப்பதால் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்குவதாக கூறிய நீதிபதி, 2 வாரம் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.