சென்னை உயர்நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடத்தப்படுகிறது. காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
எனவே உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.