தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் நகரில் நடைபெறும் கண்காட்சியில் மார்ச் 26, 27 ஆகிய நாட்களில் பங்கேற்கிறார். துபாயில் நடைபெறும் உலக அளவிலான கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன.
கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் செய்யத் தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தக் கண்காட்சியில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
மாநிலத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மார்ச் 26, 27 ஆகிய இரு நாட்களிலும் இந்தக் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
முன்னதாக மார்ச் 6, 7 ஆகிய நாட்களில் முறையே விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் புதிய திட்டப்பணிகளைத் தொடக்கி வைக்கிறார்.