செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் 3,4,5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mar 02, 2022 03:51:54 PM

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுதினம் நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 4-ந் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5-ந் தேதியும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடல், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement
வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - காங்கேசன் துறைமுகம் செல்லும் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்
கொடைக்கானலில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல்
உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு கள ஆய்வுக்கு அதிகாரிகள் ஏன் போகலை?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்
பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
செயின் பறிப்புக் கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த "டாட்டூ".. சுவாரசிய பின்னணி..!
இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்
பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement