ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள், சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாயல்குடி - கமுதி சாலையில் இளைஞர்கள் 6 பேர் நான்கு பைக்குகளில் வந்து கொண்டிருந்தனர். யார் முதலில் வேகமாக செல்வது என போட்டிப்போட்டுக் கொண்டு அவர்கள் அதிவேகமாக வந்த நிலையில், வளைவில் திரும்பும் போது இரண்டு பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதியது. இதில் இளைஞர்கள் இருவரும் அடுத்தடுத்து தூக்கிவீசப்பட்டனர்.
பின்னர், அவர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்து அழைத்துச் சென்றுவிட்ட நிலையில், பைக்கில் வந்த இளைஞர்கள் யார் என சிசிடிவியை வைத்து சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் வந்த இளைஞர்களில் யாருமே ஹெல்மெட் அணியாத நிலையில், அதிவேகத்தில் வந்ததோடு, வந்த வேகத்தில் வளைவில் திரும்பியதால் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.